அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை முழுமையான வரலாறு

May 2, 20120 comments

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை முழுமையான வரலாறு
இது "நம் ஊரை நாம் அறிவோம்" புதிய வரலாற்று தொடர்

பணிக்கூற்று 
தேசிய கல்வி நோக்கங்களை அடையும் வகையில் தரமான செயற்பாடுகளின் ஊடாக தேர்ச்சிகளைப் பெறச்செய்து மாணவர்களிடத்தே மறைந்திருக்கும் தனியாள் திறன்களை செழுமையேற்றி தொடர் தேர்ச்சிகளிற்காக தொடர்ந்து இயங்கும் மனப்பாங்கு உடையவராக ஆக்கும் கற்றல், கற்பித்தல், இணைபாட செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

நோக்கக் கூற்று 

எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுத்து, சமூகப் பொருத்தப்பாடுடைய, சுயமாக இயங்ஙக் கூடிய, ஒழுக்கமும் சீலமும் கொண்ட பிரஜையை உருவாக்கல்.   

பாடசாலை பற்றிய சுருக்க வரலாறு

இலங்கையின் வடமாகாணத்தில் தமிழர் பண்பாடு சிறந்தோங்கும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கல்வியும் பண்ணும் உயர்ந்து மிளர்கின்ற கொக்குவில் எனும் ஊரில் கொக்குவில் இந்துக் கல்லூரியிலிருந்து பிரிந்து கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையாகத் தனித்துவம் பெற்றது.

அன்றைய நாளில் திருவாளர் செ.நாகலிங்கம் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருடன் திருமதி.சி.செல்வராசா, திருமதி.ம.இரத்தினம், திருமதி.வி.நாகரத்தினம், திருமதி.சி.நாகலிங்கம், திருமதி.அ.அன்ரனிராஜ், திருமதி.த.பேரம்பலம் ஆகியோர் ஆசிரியர்களாக கடமையாற்றினார். இக் காலப்பகுதியில் பௌதீகவளம், கல்விவளம் ஓரளவிலே இருந்தது. இவ் அதிபரின் அயராத உழைப்பினால் ஒரு பிரிவுடன் ஆரம்பிக்கப் பட்ட இப் பாடசாலை இரண்டாவது வருடத்திலே வகுப்புகளுக்கு இரு பிரிவுகளைக் கொண்ட பாடசாலையாக மாணவர் தொகை அதிகரித்தது. 40X40 கொண்ட இரண்டு கட்டிடங்களையும் கட்டி முடித்தார்.

இதன் பின்னர் 1978 இல் திரு.வே.குலசேகரப்பிள்ளை அவர்கள் அதிபராக கடமையாற்றினார்.அதனைத் தொடர்ந்து 1979 இல் திரு.அ.குருசாமி அவர்கள் இடமாற்றத்தின் மூலம் அதிபராக நியமிக்கப்பட்டார். இவருடைய காலத்தில் ஆசிரியர்களுடைய அயராத உழைப்பினால் பாடசாலை பெருமையில் மேலோங்கியது. 1984 இல் உபஅதிபராகக் கடமையாற்றினார்.

1985 மார்ச் மாதத்தில் திரு.த.அழகரத்தினம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றத் தொடங்கினார். இவரின் காலத்தி; படிப்படியாக மாணவர்களின் தொகை அதிகரித்து வந்நது. 1989 இல் வகுப்புகளின் தொகை மொத்தம் பதினைந்து பிரிவுகளாக உயர்ந்தது. இதனால் இடப்பிரச்சனையும் ஏற்பட்டது. 1989 ஆம் ஆண்டிலிருந்து எமது பாடசாலை புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறத் தொடங்கின. இதன் அடிப்படையில் 1997 இல் நான்கு மாணவர்கள் முதன்மைப் புள்ளிகளைப் பெற்றதோடு இவர்களில் இரு மணவர்கள் ஜனாதிபதியிடம் பரிசும் பெற்றுள்ளனர். அதே போன்று 2000ம் ஆண்டுப் பரீட்சையில் ஒரு மாணவன் அகில இலங்கையில் பத்துப் பேரில் ஒருவராக முதன்மைப் புள்ளிகளை பெற்றுள்ளார்.

s3s5
பௌதிக வளங்களை மேம்படுத்தும் நோக்குடன் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியில் அத்திவாரமிடப்பட்டு 1998இல் இருமாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் பாடசாலைக்கு ஒரு காரியாலயமும் கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் பாடசாலைக்கு அயலில் காணியொன்றைக் கொள்வனவு செய்து பாடசாலைக்கு வழங்கியுள்ளது. அக் காணியில் புவுணு நிதியுதவியுடன் ஆரம்ப பரிவு மாணவர்களுக்கான மலசலகூட வசதிகளும் செய்யப்பட்டன. அத்துடன் பாடசாலையில் இணைப்பாடச் செயற்பாடுகளும் சிறப்பாக நாடாத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 2001 ஆம் ஆண்டில் திரு.சி.ஞானேஸ்வரன் அவர்கள் அதிபராகப் பதவியேற்றார். இவ் அதிபரதும், ஆசிரியர்களினதம் அயராத உழைப்பினால் பாடசாலைக் கல்விசார் செயற்பாடுகள் ஒழுங்கான முறையில் இடம்பெற்றன கொள்வனவு செய்யப்பட்ட காணியில் ஒரு 140'X30' மாடிக்கட்டிடத்தின் கீழ்த்தள வேலைகள் பழைய மாணவன் திரு.தவராஜாவின் உதவியினால் ஆரம்பமாகின. பின் 2003.03.01 இருந்து இப் பாடசாலையின் பழைய மாணவியும்இமுன்னாள் ஆங்கில ஆசிரியையும் ஆன திருமதி.செல்வராணி சகாதேவன் இப் பாடசாலையின் அதிபராக கடமையேற்றுள்ளார். இவரது காலப்பகுதியில் பாடசாலையினது கல்வி வளர்ச்சியிலும் பௌதீக வளர்ச்சியிலும் பெரும் முன்னேற்றத்தை அடைந்தது. இப் பாடசாலைக்கு முதன் முதலாக இந்து கலாச்சார அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கான 'பான்ட்' வாத்தியக் கருவிகள் வழங்கப்பட்டன. எமது பாடசாலை மாணவர்களைக் கொண்ட ஒரு 'பான்ட்' வாத்தியக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப் பாடசாலையின் பழைய மாணவன் திரு.மாணிக்கம் சுப்பிரமயணியம் அவர்களால் மேல் மாடிக் கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டது. இப் பாடசாலைக்கு மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளது. தற்போதுள்ள பாடசாலையின் முதல்வராய் மாணவர் கற்றல் சார்பான முயற்சிகள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன.ஒழுக்கம்இகட்டுப்பாடு என்பன நன்கு பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறுதொழியர்இ குருளைச்சாரணார் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கான பெயர் வளைவு உருவாக்கப்பட்டுள்ளது. மண்டபங்கள், வகுப்பறைகளுக்கு மின்வசதிகள் அமைக்கப்பட்டன. நீர்த்தாங்கி அமைக்கப்பட்டது. நோக்கக்கூற்றுஇ பணிக்கூற்று உருவாக்கப்பட்டது. ஆரம்பக் கல்வி கற்றலை மேம்படுத்தும் வகையில் சுவர்ச்சித்திரங்கள் வரையப்பட்டன. மண்டபம், வகுப்பறைகள் யாவும் வர்ணம் பூசப்பட்டன. மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை ஏற்படுத்தும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டது. அதிபர் அலுவலகம் பாகம் இடப்பட்டு ஓழுங்குபடுத்தப்பட்டது. வலயக் கல்வி அலுவலகத்திரின் உதவியுடன் கணனி மூலை உருவாக்கப்பட்டு மாணவர் கணனி பயிற்சிகளில் ஈடுபடுகின்றனது. அத்துடன் உலக உணவுத்திட்டத்தின் அணுசரணையுடன் புதிதாக சமையல் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பௌதீக வள தேவைகள் பூர்த்தி செய்த நிலையிலும் எமது மாணவருக்கான ஒரு நூல் நிலையமும் விளையாட்டு மைதானமும் மாணவர் கற்றலுக்கு ஏற்ற வகையால் நவின வகுப்பறைகள் இல்லாமை அவர்களின் கல்விஇ இணைபாட செயற்பாடுகளுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளன

அன்பான உறவுகளுக்கு ...........!
இந்த மாதம் தொடக்கம் கொக்குவில் வரலாற்றினை ஆவணப்படுத்தும் முயற்சியாக கொக்குவிலில் உள்ள அனைத்து பாடசாலை,கோவில், சனசமூகநிலையம் போன்றவற்றின் வரலாறு ஆவணபடுத்தபட உள்ளது இந்த முயற்சிக்கு உங்கள் பூரண ஒத்துழைப்பை வேண்டி கொள்கின்றேன் 
ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதிஉம் கொக்குவில் வரலாறு(நம் ஊரை நாம் அறிவோம் புதிய வரலாற்று தொடர்) பதியப்படும் 
அன்புடன் உங்கள் சொந்தம் 
அர்ஜுன் ராஜேஸ்வரன்



கற்றல் முன்னேற்றத்தில் பெரும் வளர்ச்சி கண்டுள்ள பாடசாலை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்திலும் தேசிய ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இவை தவிர ஆரம்ப பரிவு இணைபாடவிதான செயற்பாடுகளில் வாய்ப்பாடு மனனம், துரித கணிதச் செய்கை, திருக்குறளட மனனம், இசைவும் அசைவும் ஆகியவற்றில் மாகாணமட்டத்தில் முதல் இடங்களையும் தேசிய மட்டத்தில் பாவோதலுக்கு பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆங்கில தினப் போட்டிகளிலும் இப்பாடசாலை வாசிப்பு,பாடுதல்,சிறுவர் நாடகம் ஆகிய போட்டிகளில் வலய மாகாணம் என்பவற்றில் முதலிடங்களையும் பெற்றுள்ளது. ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான சிறுவர் அரங்கு போட்டியில் பல தடவைகள் மாவட்ட நிலையில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வளர்ச்சிகளை பல பெற்று சிறந்த ஆரம்பப் பாடசாலையாக மிளிரும் இப் பாடசாலையின் பாடசாலைக் கீதத்தை திரு.கு.சண்முககுமரெசன் அவர்கள் இயற்றியுள்ளார். இக் கீதத்தின் படி கொக்குவில் கிராமத்தில் அறிவு பரப்பும் பாடசாலையாக திகழும் இப் பாடசாலை 'இளமையில் கல்' எனும் மகுட வாசகத்துடன் இன்றும் மாணவச்சிறார்களுக்கு அறிவை விருத்தி செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றது.

Web Address http://www.kokuvilhp.sch.lk

ஆசிரியர் விபரம்


01   திருமதி.செ.சகாதேவன் (அதிபர்)
02   திருமதி.​​ஜெ.வரதராஜா
03   திருமதி.வி.சிவபாலன்
04   திரு.இ.தபானந்தன்
05   திருமதி.ஞா.நவதினராசா
06   செல்வி.மா.மைதிலி
07   செல்வி.த.சௌரியா
08   செல்வி.க.சசிகலா
09   செல்வி.ந.சாரதா
10   செல்வி.தி.சிவகலை
11   திருமதி.அ.கவிதா
12   திருமதி.ஜெ.கங்கா
13   திருமதி.உ.பஞ்சமூர்த்தி
14   திருமதி.ச.நந்தகுமார்
15   திருமதி.யோ.பாலசுப்பிரமணியம்
16   திருமதி.தி.சண்முகலிங்கம்
17   திருமதி.ச.தேவதாஸ்
18   திருமதி.சி.விஜயகோபால்
19   திரு.சி.சிவகாந்தி
20   திருமதி.ம.பிறேமானந்
21   திருமதி.சு.நந்தகுமார்
22   திருமதி.வெ.சத்தியன்
23   திருமதி.லோ.ரூபராஜ்
24   திருமதி.வி.சந்திரசேகரம்
25   திருமதி.ந.கேதீஸ்வரன்
26   செல்வி.யோ.வாசுகி
27   செல்வி.ஜா.வனஜமலர்

அடுத்த மாதமும் புதிய வரலாற்றுடன் சந்திப்போம் 
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger