கொக்குவில் இந்துக் கல்லூரியால் வருடாந்தம் லயன்.டு.பாலகிருஷ்ணன் நினைவாக நடாத்தப்படும் அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்
கிறிக்கெட் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை 24 ஓட்டங்களால் வெனறு ஸ்கந்தா அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
இவ் இறுதிப் போட்டியானது கடந்த 28.04.2012 சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணித்தலைவர் சஞ்சயன் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியினர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை அழந்து 61 ஓட்டங்களை குவித்தது. இதில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிசார்பாக து.ஜனக்சன் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உட்பட 31 ஓட்டங்களையும் வு.நிரேசன் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உட்பட 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக திவாகர், பங்குஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு வெற்றி இலக்காக 62 ஓட்டங்களை கொண்டு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி ஸ்கந்தாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது 4.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 37 ஓட்டங்களை மட்டுமே பெற்று 24 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. கொக்குவில் இந்து அணி சார்பாக பங்குஜன் ஆட்டமிழக்காது 3 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்களை பெற்றார். ஸ்கந்தா அணியின் பந்துவீச்சில் வு.நிரேசன் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும்ளு.சஞ்சயன், து.ஜனக்சன், வு.சிந்துஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். போட்டியின் சிறப்பாட்ட காரராகவும் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும் ஸ்கந்தா அணியைச் சேர்ந்த வு.நிரேசனும், தொடர் ஆட்ட நாயகனாகவும் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் அதே அணியைச் சேர்ந்த து.ஜனக்சனும் தெரிவு செய்யப்பட்டனர். ஸ்கந்தா அணியானது காலிறுதியில் யாழ் மத்திய கல்லூரியையும் அரையிறுதியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியையும் வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத் தக்கதாகும்.