அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் காளியப்ப வைரவர் கோவில்

Jan 10, 20160 comments

கொக்குவில் காளியப்ப வைரவர் வரலாறு

வைரவர் துதிகாளியர்த்த வையிரவருக்கு கண்ணியமாய் தொண்டு  செய்வோர்
நாளில் பகை நீங்கி நண்ணிடுவர் நல்வாழ்வு –ஆளும்
தகையையேற்று அகிலத்தில் தாங்கிடுவீர் பெருமையெல்லாம்
மகிமைள்ளன் மலர்ப்பதே நன்று

ஞானவைரவரே நம்பிவந்தோம் காத்திடுவாய் - எங்கள்
ஊளமெல்லாம் நீக்கிடுவாய் உண்மைநலம் தந்திடுவாய்
பானை வைரவரே பாலகனோடுறையூம் எங்கள்
மோனக் கடவுளே முந்தி எமக்கருள் தருவாய்

பரணிதன்னில் வைரவரே பார்த்துவந்தோம் உம்கோயில்
தாரணியில் படுந்துயரை பாழாக்கிப் பரிந்தெம்மை
கரம்தந்து காத்திடுவீ ர் கொக்குவிலூர் கடவூளாரே
சிரம்தாழ்த்தி தொழுதிடுவோம் திடமான வாழ்வருள்வாய்.
                                                                               புலவர் : மு.சி.ஸ்ரீதயாளன்

எல்லாம் வல்ல சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொண்ட சித்தாந்த சைவர்கள் வழிபடும் தெய்வ சிவமூர்த்திகளென ஆகமங்கள் சித்தரிக்கும் இருபத்தைந்து மூர்த்திகளில் வைரவ மூர்த்திக்கு சிறப்பு இடமுண்டு. சிவனின் பஞ்சகிருத்திய ஆற்றலை அகோரமூர்த்தி வடிவில் சூலாயுத அடையாளத்தின் மூலமே வெளிப்படுத்தும் தெய்வம் வடுகமூர்த்தி தானே ஏகப்பரமனென்று அகந்தை கொண்ட பிரம்மா ஒருமுறை தன்னை சிவனுக்கு மேலான தெய்வம் எனஅகங்காரம் கொண்டார் ஆதியில் சிவனைப் போலவே ஐந்துமுகங்கள் பிரம்மாவுக்கு இருந்தது. பிரம்மாவின் அகங்காரத்தை அடக்க எண்ணம் கொண்ட சிவமூர்த்தியின் இன்னொரு தோற்றமே வைரவ வடிவம். தன் இதயத்திலிருந்து ஆவேகசக்கியை உருவாக்கி வைரவ தோற்றத்தைச் செய்த சிவனார்  வைரவரைக் கொண்டு பிரம்மாவின் உச்சி நோக்கி இருந்த சிரசை சூலாயுதத்தால் கிள்ளி எடுத்ததாக வரலாற்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பரமனை மதித்திடாப் பங்கையாசனன்
ஒரு தலைக் கிள்ளியே ஒழிந்தவானவர்
குருதி செய்யும் அகந்தையும் கொண்டுதண்டமும்
புரிதடு வடுகனைப் போற்றி செய்குவோம்
 
 


இந்த அடிப்படையில் சமயமரபில் கடவுள் வழிபாடு முக்கியம் பெற்றிருந்த காலத்தில் கொக்குவில் மத்தியில் ஒரு வைரவர் ஆலயம் பலகாலமாக இருந்தது தெரியவந்தது. இலங்கை அந்நியர் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் கிறிஸ்தவம் முக்கிய சமயமாக இருந்தது. போத்துக்கீசர் காலத்தில் சைவ ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. சைவமரபு காக்கும் விரதம் கொண்ட எம் மூதாதையர்கள் தெய்வவிக்கிரகங்களை தமது காணியில் நிலத்தில் புதைத்து வைத்துள்ளார்கள். இவ்வாறான காலகட்டத்தில் காலங்காலமாக வழிபட்ட வைரவமூர்த்தியான சூலாயுதமொன்று துரையப்பாவின் காணியில் கண்டெடுக்கப்பட்டு கட்டிக் காத்து வழிபட்டு வந்துள்ளார்கள். இதில் அயலவர்களும் பங்குபற்றி வழிபட்டு வந்துள்ளார்கள். இக் கோவிலினை  காளியப்பஞானவைரவர் கோவில் என அழைக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

துரையப்பருக்குப் பிறகு இக் காணியை உரிமையாக்கிக் கொண்ட திரு.வல்லிபுரம் குலசிங்கம் குடும்பம்,  திருமதி கௌரி செந்தில்நாதன் குடும்பம், திருமதி ஜனனி செந்தூரன் குடும்பம் காணியை அன்பளிப்பாக கோவிலுக்கு வழங்கினார்கள். 2002 ஆம் ஆண்டு இந்தக் கோவிலுக்குச் சுற்றுமதில் கட்டும்பொழுது அருணாசலம் பரமேஸ்வரியும் சிறு துண்டுக்காணி அன்பளிப்பாக வழங்கினார். இப்பொழுது வையிரவர் கோவில் நாலுபக்கச் சுவர்களுடன் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றது.

இக் கோவிலை அயலவர்களின் உதவியுடன் திரு.வல்லிபுரம் குலசிங்கம் குடும்பம்  பராமரித்தும் பூசைகளைத் தடையின்றி நடத்தியும்  வந்துள்ளனர். திருமதி தயாநிதி பாலகுமாரன் அவர்களின் அயராத முயற்சியினால் பணம் சேர்த்து ஆலயத்திற்கு  நிதியம் ஒன்றை 1999 இல் உருவாக்கினார்.

Website  :http://kaliyappabairavarkovil.weebly.com/

Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger