உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதலி கோவிலடி கொக்குவில் பகுதியில்வசிக்கும் யாழ். கொக்குவில் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவியான தவராசா மஞ்சுஜா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன.
உயர்தர மாணவர்கள் அனைவரும் தமது பெறுபேற்றினை எதிர்பார்த்து பரீட்சை பெறுபேறுகளை பார்த்த நிலையில், பல மாணவர்களின் பெறுபேறுகள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை.
இந்த நிலையில், யாழ்; கொக்குவில் இந்து கல்லூரியில் கலைப்பிரிவில் பரீட்சை எழுதிய மாணவியான இவர், தனது பரீட்சை பெறுபேற்றினை சனிக்கிழமை பார்த்துள்ளார்.
பெறுபேறுகள் இரண்டு சி மற்றும் ஒரு எஸ் வந்ததையிட்டு மன அழுத்த்தில் வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் கடைசி பிள்ளையான இவர், ஞாயிற்றுக்கிழமை சகோதரியுடன் வீட்டில் இருந்த போது, அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த நேரம் குறித்த பாடசாலை ஆசிரியரான தாயார் சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிக்காக பாடசாலைக்கு சென்றுள்ளார்.
அதன்போது, குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளார். பின்னர் சகோதரி சென்று பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு பெற்றோருக்கு அறிவித்துள்ளார். அதன்பின்னர் பெற்றோர் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர், யாழ். நீதிவான் சென்று சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கபட்டுள்ளது. குறித்த மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையினை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.