கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர் பதவி ஏ ற்று கொண்டதுடன் ஆசிரியர்கள் மாணவர் உடன் கலந்துரை யாடல்களையும் சந்திப்புகளையும் மேற்கொண்டு உள்ளார் இதன் போது பாடசாலையின் சிறப்பான நிர்வாகத்திற்கு ஆசிரியர் மாணவர்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற தொனிப்பட கருத்துகளை தெரிவித்து உள்ளார்
அந்த வகையில் கொக்குவில் இந்துவின் புதிய தலைமைத்துவத்தை அனைவரும் ஏதிர்பாத்துஉள்ளனர்
கொக்குவில் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக நியமனம் பெற்ற திரு.வே.ஞானாகாந்தன் அவர்கள் இன்று தனது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்கிறார். எமது கல்லூரியின் 16வது அதிபராக கடமை ஏற்கும் அதிபர் திரு.வே.ஞானகாந்தன் அவர்களை உளமார வரவேற்பதோடு கல்லூரி சமூகம் சார்பாக எமது வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம். திரு.வே.ஞானகாந்தன், BA, MEd அவர்கள் இலங்கை அதிபர் சேவை தரம் - 1 தகுதி நிலை பெற்ற அதிபர் என்பதுடன் முன்னதாக யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் (ஸ்டான்லி கல்லுரி) அதிபராக கடமையாற்றியவர் என்பது குறிபிடத்தக்கது. |
புதிய முதல்வர் பதவியேற்கும் இந்நன்னாளில் அவரை கொக்குவில் இந்துவின் மாணவச்செல்வங்கள், ஆசிரியப் பெருந்தகைகள், பழைய மாணவர்கள் மற்றும் நான்விரும்பிகள் அனைவருடன் கொக்குவில் இந்து இணையக்குளுவினராகிய நாமும் மனதார வாழ்த்துகின்றோம்.
உங்களின் தலைமையில் எமது கல்லூரி மென்மேலும் வளர்ச்சி பெறும்; அனைத்து துறைகளிலும் எமது மாணவச்ச்செல்வங்கள் சாதனைகள் பல படைப்பார்கள்; கல்லூரியன் பாரம்பரியம், ஒழுக்கம், விழுமியங்கள் பங்கமேற்படாது பேணப்படும்; சற்றே தளர்ந்துவிட்ட மாணவர்களின் கல்விச் செயற்பாட்டு வெளிப்பாடுகள் மீண்டும் உயர் நிலைக்கு கொண்டுவரப்படும்; கல்லூரியின் அபிவிருத்திப் பணிகள் தூர நோக்குடனும் அதியுச்ச பயனைப் பெறும் வகையிலும் அமைய வேண்டும்; மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஆசிரியர்களின் கற்பித்தல் மேம்பாடு பயிற்சிகள், ஆய்வுகூடங்கள் மற்றும் நூலக அபிவிருத்தி போன்றவற்றில் அதிக கவனம்; ... முதலியவையே எமது அவா. தங்கள் தன்னலமற்ற பணிகளுக்கு உறுதுணையாக உலெகெங்கும் பரந்துவாழும் கொக்குவில் இந்துவின் பிள்ளைகள் இருப்பார்கள். " உள்ளத்துறுதி தருவாய் உந்தன் பாரம்பரியம் பேண பூமியில் நீ பெறும் நல்லிசை மேலாம் பெருமிதம் மாணவர்கென்றும் " |