அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

புதிய அதிபரை வாழ்த்தி வரவேற்போம் - கொக்குவில் இந்துக்கல்லுரி பழைய மாணவர் சங்கங்கள்khc

Oct 10, 20120 comments



கல்லூரியின் புதிய அதிபர் திரு.வே.ஞானகாந்தன் அவர்களை வரவேற்று கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி.  
யாழ். சமூகத்தின் தனித்துவமான கல்வி மரபுகளையும், விழுமியப் பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்டு அறிவுலகின் புகழ் பூத்த கல்லூரியாக கொக்குவில் இந்துக் கல்லூரி திகழ்கின்றது.

இக் கல்லூரித் தாயின் வளர்ச்சியிலும்,உயர்ச்சியிலும் உறுதுணையாக நின்ற முன்னாள் புகழ் பூத்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள் போன்றவர்களின் அளப்பரிய சேவையினாலேயே முதன்மைபெற்று விளங்குகின்றது.

அதிலும் குறிப்பாக எமது கல்லூரியின் புகழ் பூத்த அதிபர் அன்பிற்கும் பெருமதிப்பிற்க்கும் உரிய உயர்திரு கன்டி பேரின்பநாயகம் அவர்களின் தன்னலமற்ற சேவையினாலேயே இன்று எமது கல்லூரி தலைநிமிர்ந்து புகழ் பூத்த கல்லுரியாக மிளிர்வது என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மையாகும். இத்தகைய சிறப்பு, மதிப்புமிக்க புகழ் பூத்த கல்லூரியில் அதிபராக வருவது கிடைத்தற்கரியபேறாகும்.

அந்தவகையில் இன்று (10-10-2012) தலைமையேற்கும் புதிய அதிபராக வருகைதரும் மதிப்பிற்குரிய அதிபர் திரு. வே. ஞானகாந்தன் அவர்களை வாழ்த்தி வரவேற்பதுடன், அவரது சேவை எமது கல்லூரியின் தனித்துவமான கலை மரபுகளையும், பாரம்பரியங்களையும் அடியொற்றி வழிநடாத்திச் செல்வதற்கு எல்லாமவல்ல கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமிகள் பாதாரவிந்தங்களை சிரம்தாழ்த்தி வணங்கி, பணிந்து மகிழ்கின்றோம்.

வரவேற்று வாழ்த்துவோர்:-

பழைய மாணவர் சங்கம் - தாய்ச்சங்கம், கொக்குவில்
பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை, கொழும்பு
பழைய மாணவர் சங்கம் - கனடாக் கிளை, டொரென்டோ
பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியக் கிளை, லண்டன்
பழைய மாணவர் சங்கம் - அவுஸ்திரேலியா/நியூசவுத்வேல்ஸ் கிளை, சிட்னி
பழைய மாணவர் சங்கம் - அவுஸ்திரேலியா/விக்டோறியா கிளை, மெல்போர்ன்
பழைய மாணவர் சங்கம் - ஜேர்மன் கிளை, ஜேர்மனி
பழைய மாணவர் சங்கம் - நோர்வே கிளை, ஒஸ்லோ 
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger