தகவல் பரிமாற்றத்தின் பாரம்பரியங்களையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் முகமாக தமிழ் இதழியல் வரலாறு எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி
கொக்குவில் இந்துக் கல்லூரி சுப்பிரமணியம் மண்டபத்தில் கல்லூரி அதிபர் அ.அகிலதாஸ் தலைமையில் நடாத்தபட்டது
யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களும் யாழ். கொக்குவில் ஊடகமாணவர்களும் இணைந்து இக் கண்காட்சி நடாத்தபட்டது
இதன் போது அச்சுக்கலை வளர்ச்சி, ஆரம்பாலத்தில் பத்திரிகைகள் அச்சுக்கோர்க்கும் விதம், இலங்கைத் தமிழ் பத்திரிகையின் வரலாறு, யாழ்.பிராந்திய பத்திரிகைகளின் வரலாறு, நிறுவனக் கட்டமைப்பு, ஆரம்பகால சஞ்சிகைகள் போன்றன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளவை அனைத்தும் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும், போட்டோப் பிரதிகளாகவுமே அமைவு பெற்றிருந்தன.
இக் கண்காட்சி யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஷ்னன், யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இணைப்பாளர் உதயகுமார், யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குநர் தே.தேவானந் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.