http://manchavanapathy.blogspot.com
முருகப்பெருமான் இனிதமர்ந்துறையும் அருட்தலங்கள் பலவற்றுள் கொக்குவிற் பதியில் சிறப்புற்றோங்கி மிளிரும் மஞ்சவனப்பதி ஆலயமும் ஒன்றாகும் “மஞ்சலியாடு” “மஞ்சமலியகாடு” “மஞ்சமருதிகாடு” எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இக்கோயில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் “மஞ்சவனப்பதி” என்ற சிறப்புத் திருநாமம் இடப்பட்டு அது நிலைத்து நின்று இன்று அருளும் ஆன்மீகமும் பொழியும் ஆலயமாக வளர்ந்துள்ளது தொன்மை வாய்ந்த இத்தெய்வீக திருத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளி அருள் புரிகின்றார்.
http://manchavanapathy.blogspot.com
கொக்குவிற் கிராமத்தில் “மஞ்சமருதிகாடு” என்பது ஒரு குறிச்சியின் இடப்பெயராகும் அன்று இவ்விடம் மேட்டு நிலமாகவும் மருதமரங்கள் நிறைந்த சோலையாகவும் அங்கு “அம்பலவான விநாயகமூர்த்தி” என்ற பெயருடன் ஒரு சிறு கோயிலும் இருந்துள்ளது அக்கோயிலுக்கு முன் ஒரு கொட்டகையும் அமைக்கப்பட்டு இருந்தது கூரையாலும் ஓலையாலும் வேயப்பட்டும் தரையைச் சாணத்தால் மெழுகியும் வந்துள்ளனர் அந்தணர் பரம்பரையைச் சாராத சைவமரபில் வந்த ஒருவரே ஒருவேளை பூசையையும் செய்து வந்தார்.
இவ்வாறு மடாலயமாக இருந்த இக்கோயில் 1817ம் ஆண்டில் ஆகம முறைப்படி கற்கோயிலாக அமைக்கப்பட்டது. அச்சமயம் தற்போது விநாயக சன்னதியில் பரிவாரமூர்த்தியாக பிரதிட்டை செய்யப்பட்டுள்ள ஆதி “அம்பலவாண விநாயகர்” “மஞ்சமூர்த்தி” என அழைக்கப்பட்டுவர கர்ப்பக்கிரகத்தில் மூலவராக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியப் பெருமான் மஞ்சவனப்பதி முருகனாக வீற்றிருக்கிறார் எனக் கர்ணபரம்பரைக் கதையாகக் கூறப்பட்டு வருகிறது.
http://manchavanapathy.blogspot.com