இவ்வாலயம் இற்றைக்கு நூற்று எழுபத்தைந்து வருடங்களுக்கு முன் அதாவது 1830ல் இச் சுற்றாடலில் வாழ்ந்த சைவ மக்களால் தாபிக்கப்பட்டது இவர்கள் சுதந்திரமாக இறைவழிபாடு செய்து மனநலம் பெறுவதற்கும் உயிர் மேல்நிலை அடைவதற்றுகும் “குறைவிலா நிறைவாய் கோதிலா அமுதாய்” விளங்கும் இறைவன் திருக்கோயில் இன்றியமையாதெனக் கருதி இவ் முருகன் ஆலயத்தை அமைத்தார்கள். முருகப்பெருமான் இங்கே “கிருபாகரன்” என்ற திருப்பெயருடன் சிறீவள்ளி தேவசேனா சமேதராக வீற்றிருந்து அருளாச்சி புரிகிறார்.
இவ்வாலயம் தோன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்
சைவ வேளாளர் குடும்பத்தினராகிய பதினைந்து குடும்பத்தினர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தலைவர்கள் வாழ்க்கைத்தரம் பெற்று “தெய்வம் என்பது ஓர் சித்தம” உண்டானபோது தாங்கள் இறைவழிபாடு செய்யவும் தொண்டாற்றவும் விழாக்கொண்டாடவும் திருக்கோயில் அவசியம் என்பதை உணர்ந்து 1830ஆம் ஆண்டளவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவிலை (புதுக்கோயிலை) கட்டஆரம்பித்தனர்.
கொக்குவில் மத்தியில் வசித்த மக்கள் சிலர் அண்மையிலிருந்த காட்டுபுல முருகமூர்த்தி கோயிலில் முருகவழிபாட்டை செய்துவந்த காலத்தில் ஒருநாள் முருகமூர்த்திகோயிலில் பூசை முடிந்ததும் ஐயர் முன் வரிசையிலிருந்த அடியார்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்காது இரண்டு, மூன்று வரிசைகளுக்குப் பின்னால் நின்ற கோயில் உரிமையாளராகிய இராமுப்பிள்ளையின் மனைவியை முன்வரிசை;த அம்மையாருக்கு முதலில் விபூதிப்பிரசாதம் வழங்கிய பின்பே மற்றையோருக்கு விபூதிப் பிரசாதம் வழங்கினாராம். அம்மையார் அவர்களிடம் இருந்து வேதனம் வாங்கும் ஐயர் கோயிலின் உரிமையாளர் குடும்பத்திற்கு செய்த மரியாதையை பிழையாக விளங்கிக் கொண்ட முன்வரிசையிலருந்த பெண்கள் சிலர் ஐயரின் செயலை தமக்கேற்பட்ட அவமாரியாதையாக கொண்டு உடனே கோயிலிலிருந்து வெளியேறினார்கள். பேண்கள் எதையும் சாதிக்க வலிலவர்கள் அன்றெருநாள் தாம் காட்டுப்புல முருகமூர்த்தி கோயிலிலிருந்து வெளியேறிய பெண்களின் தற்பெருமையும் போட்டி மனப்பாண்மையும் அவர்களின் கணவன்மாரின் தூண்டி உற்சாகப்படுத்தி புதிய கோயில்கள் அமைக்க வைத்ததும் முருகன் திருவிளையாடலே அந்தக் குடும்பத்தலைவர்களின் சிந்தனையின் விளைவுதான் கோயில் ஆரம்பம் காலக்கிரமத்தில் பல அடியார்களின் முயற்சியால் நாம் காணும் பெரிய கோயிலாக பரிமாளிக்கிறது.
நன்றி கிருபாகரசிவசுப்பிரமணிய சுவாமிகோயில் தோற்றமும் வளர்ச்சியும் நூல் 26.05.2010