1910 மதம் சார்ந்த பாடசாலை முறையின் கீழ் அடங்கிய பாடசாலைகளுள் ஒன்றாக இ. செல்லையா அவர்களின் வழிகாட்டலில் 1910ம் ஆண்டு கொக்குவில் இந்து கல்லூரி தாபிக்கப்பட்டது.
1926 கனிஷ்ட இரண்டாம் நிலை பாடசாலையாக மதிப்பீடு செய்யப்பட்டது
1940 சிரேஷ்ட இரண்டாம் நிலை பாடசாலையாக மதிப்பீடு செய்யப்பட்டது
1960ல் அரசாங்கம் கைஏற்கும் வரை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் இயக்குனர் சபையின் நிவாகத்தின் கீழ் இருந்தது.
1960ல் அரசாங்கத்தால் கைஏற்கப்பட்ட பின்னர் கல்லூரியின் பெறுபேறுகள் வளர்ச்சி கண்டதுடன் கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் மற்றும் சாரணியம் என்பன ஏனைய யாழ் மாவட்ட பாடசாலைகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்சிகண்டது.
1961 அதிபர் பேரின்பநாயகத்தின் அயராத முயற்சியினால் முதலாவது இரண்டு மாடி கட்டிடம் கட்டி திறந்துவைக்கப்பட்டது.
1972 கல்லூரியின் வடபகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டது
1972 திரு. மகாதேவா அவர்கள் அதிபராக பொறுபேற்றார்
1980 திரு.அ. பஞ்சலிங்கம் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்.
1991 திரு.இ.மகேந்திரன் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்
1996 திரு. பொ . கமலநாதன் அவர்கள் அதிபராக பொறுபேற்றார். குறிப்பாக இவர் பௌதீக வளங்களை அதிகரிப்பதில் முனைப்பாக செய்ட்பட்டார்.
2004 மாணிக்கம் சுப்ரமணியத்தின் 13 மில்லியன் நிதி யுதவியுடன் கல்லூரியின் தென் புறத்தில் 3 மாடி 100 ஆண்டு விழா மண்டபம் அமைக்கப்பட்டது
2004 கல்லூரியின் சர்வதேச நூற்றாண்டு விழாக்குழு ஆரம்பிக்கப்பட்டது.
2005 முனைநாள் ஆசிரியர் சினத்தம்பி அவர்களின் நினைவாக அவரது பிள்ளைகளின் 20 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் மற்றுமொரு 3 மாடி கட்டிடம் நிறுவப்பட்டது
2007 திரு. அ. அகிலதாஸ் அவர்கள் அதிபராக பொறுபேற்றார்
2008 இந்துகளின் சமர் (BATTLE OF THE HINDUS) என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி களுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர் உத்தியோக பூர்வமாகஆரம்பிக்கப்பட்டது
2010 இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் வளர்ந்துவரும் பாடசாலை கிரிக்கெட் அணிக்கான விருதினை வென்றது