கொக்குவில் இந்துக் கல்லூரியின் விஞ்ஞான தின விழா கல்லூரியில் உள்ள பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பி.செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பொறியியலாளர் இராஜரத்தினம் இராஜேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக ஞானலோஜினி சிவஞானம் வசந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி, கே. மோகனதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சாரதி சஞ்சிகையின் ஏழாவது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை கல்லூரி அதிபர் அ.அகிலதாஸ் வெளியிட்டு வைத்தார்.
சஞ்சிகையின் ஆய்வுரையை யூனியன் வங்கி உத்தியோகத்தர் வை. பாலகுமாரன் மேற்கொண்டார்.
நிகழ்வில் கலை நிகழ்வாக பட்டி மண்டபம் இடம்பெற்றது. டெங்கு ஒழிப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது அரச நிறுவனங்களா? பொது மக்களா? என்ற தலைப்பில் இது அமைந்தது.
அரச நிறுவனங்களே என்ற சார்பில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவிகளான ரூபினி, சர்மியா, நிலக்சி ஆகியோரும், பொதுமக்களே என்ற சார்பில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவிகளான சாமந்தி, யசிந்தா, லிங்கப்பிரியா ஆகியோரும் வாதிட்டனர். நடுவராக நீர்வைக்கிழார் பங்கு கொண்டார்.
இதேவேளை கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் கே. வேலாயுதம் அகவை அறுபது காண்பதையிட்டுப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற விஞ்ஞான தின விழாவின் போது கல்லூரி அதிபர் அ.அகிலதாஸ் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
பிரதி அதிபர் கே. வேலாயுதம் புகழ் பூத்த கணித ஆசான் என்பதும் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தின் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டு சாரதி என்ற இதழை வெளிக்கொணரத் தொடங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் பிரபலமான மணி கல்வி நிலையம் ஊடாகவும் இவர் கல்விச் சமூகத்தால் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.