உலகில் தனித் தமிழ்
தழைத்தோங்க தன்னிகரில்லாத சேவையாளராகத்
திகழ்ந்த முதல்வர்
அக்தியர் அன்னாரின்
அடியொற்றி வாழ்ந்த
தலைசிறந்த தமிழ்
அன்பர்களுள் ஒருவரான செல்லையா உபாத்தியாயர் என்பவரால்
1910 ஆம் ஆண்டு
“கொக்குவில் இந்து ஆங்கிலப் பாடசாலை’ எனும்
திரு நாமத்துடன்
ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே தற்போதைய
“கொக்குவில் இந்து
ஆரம்ப பாடசாலை’
ஆகும்.
” இளமையிற் கல்’ எனும் மகுட வாசகத்துடன்
ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையினை நிறுவிய செல்லையா உபாத்தியாரே அதிபராகவும் ஆசிரியராகவும் செவ்வனே சேவையாற்றி இவ் ஊர்ப்பிள்ளைகளுக்கு மட்டுமன்றி அயலூர்ப் பிள்ளைகளுக்கும் அறிவுப் பசியினை மட்டுமன்றி வயிற்றுப் பசியினையும் போக்கிவந்தார்.
இவருடைய இச் சேவையினை
கண்டு வியந்த
அவ்வூர் பெருந்தகைகள்
அவரை மனதாரப்
பாராட்டி வாழ்த்தியதுடன்
பாடசாலையின் பெரு வளர்ச்சிக்கு தமது பல்வேறு
ஒத்துழைப்பையும் வழங்கி பாடசாலையினை ஓர் உயர்ந்த
நிலைக்கு இட்டுச்சென்றனர்.
இப் பாடசாலைன்
தீவிர வளர்ச்சியை
கண்ட அரசு
1960 ஆம் ஆண்டு
இப்பாடசாலையினைப் பொறுப்பேற்றது. பாடசாலையினை
பொறுப்பேற்ற அரசு இப்பாடசாலையினை ஆரம்ப நிலை,
இடைநிலை, உயர் வகுப்புக்கள் கொண்ட 1 ஏபி
பாடசாலையாகத் தரம் உயர்த்தியிருந்தது.காலப்போக்கில் அரசாங்கம் கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தங்களின் காரணமாக ஆரம்பப் பிரிவினை மூடிவிடத் தீர்மானித்தது. 1975 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பு அனுமதி நிறுத்தப்பட்டது. இதனால், விசனமடைந்த கொக்குவில் மத்தி வாழ் மக்கள் அப்போதைய நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் சி.அருளம்பலம் ஊடாக இப்பாடசாலையின் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறியதன் பலனாக கல்வித்திணைக்கத்தின் அனுமதியுடன் 1976.01.19 அன்று கொக்குவில் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மா. மகாதேவா வால் “ஆரம்பக் கலவன் பாடசாலை’ எனும் புதிய நாமத்துடன் தனித்துவமாகப் பெருமையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் பாடசாலையின் முதல் அதிபராக செ. நாகலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். இவ் அதிபர் தமது பணிகளை சேவை மனப்பாங்குடனும் அர்ப்பணிப்புடனும் செவ்வனே ஆற்றிவந்தார். அவ்வேளையில், இப் பாடசாலை தரம் 1 முதல் தரம் 5 வரையாக ஒவ்வொரு தரமும் 2 பிரிவுகளைக் கொண்ட வகுப்புக்களாக இருந்தது. இப்படியாக தமது கடமையை சரிவரச் செய்துவந்த அதிபர் செ. நாகலிங்கம் ஓய்வுபெற்றார்.
அவரைத் தொடர்ந்து அதிபராக எ. குருசாமி என்பவர் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து அதிபர்களாக திருமதி. கணபதிப்பிள்ளை என்பவரும் சேவையாற்றியிருந்தார். இவர்களின் பின் 1985.03.15 ஆம் திகதி த.அழகரத்தினம் அதிபராக பதவியேற்றார்.
இவ் அதிபரின் காலப் பகுதியிலேயே இப்பாடசாலைக்கு பெருமளவு மாணவர்கள் படை எடுத்ததனால் வகுப்பறைகள் மாணவர்களின் தேவைக்குப் போதாததன் காரணத்தினால் ஒவ்வொரு தரத்திலும் 3 பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு மொத்தம் 15 வகுப்புக்கள் கல்வித்திணைக்களத்தின் அனுமதியுடன் பெருமிதத்துடன் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இக் காலப்பகுதியிலேயே பாடசாலையின் கல்வி முன்னேற்றம் மட்டுமன்றி பௌதீக வளங்களும் அதிகரிக்கப்பட்டன.
இப் பாடசாலையில் வழமையாக
10 இற்கும் குறைவான மாணவர்களே தரம் 5 புலமைப்
பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்து வந்தனர். ஆனால் இவ் அதிபரின்
காலப் பகுதியில்
இத்தொகை படிப்படையாக
உயர்வடைந்து 45 பிள்ளைகள் வரையும் சித்தியடைந்து பாடசாலைக்கு
பெருமை சேர்த்தனர்.
அத்துடன் 1997 ஆம் ஆண்டில் 4 மாணவர்கள் முதன்மைப்
புள்ளிகளைப் பெற்று பாடசாலையின் பெருமையினை உலகறியச்
செய்தனர். அத்துடன்
இவர்களில் இரண்டு
மாணவர்கள் ஜனாதிபதியிடம்
பரிசும் பெற்றனர்.
மேலும் 2000 மாம் ஆண்டு 5 ஆம் ஆண்டு
புலைமைப் பரிசில்
பரீட்சையில் ந. நொசாந்தன் என்ற மாணவன்
அகில இலங்கையில்
முதல் 10 மாணவர்களுள்
ஒருவராக முதன்மைப்
புள்ளியினைப்பெற்மை பாடசாலையின் வளர்ச்சிக்கு
மேலுமொரு எடுத்துக்காட்டாகும்.
இதனால், பாடசாலையினை நாடிவரும்
மாணவர்கள் தொகை
வருடாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்பட்டது. இதனால் பாடசாலயில் பௌதீக வளப்பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது.
அதனை நிவர்த்தி
செய்ய 1990 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி
வங்கியின் நிதியுதவியுடன்
இரண்டு மாடிக்
கட்டடத் தொகுதி
ஒன்று ஆரம்பிக்கப்பட்டு
1998 இல் பூர்த்திசெய்யப்பட்டது.
இக் கட்டடமே
தற்பொழுது அழகரத்தினம்
மண்டபமாக மிளிர்கின்றது.
இப்பாடசாலையின் வளர்ச்சியினைக் கண்டு வியந்த பழைய
மாணவர் சங்கத்தினர்
பாடசாலையினைப் பாராட்டி வாழ்த்தியதுடன் சங்கத்தினால் காணி
ஒன்றும் கொள்வனவு
செய்து வழங்கப்பட்டது.
இக்காணியில் “ஜிரிசற்’ நிறுவனத்தினால் மலசல கூட
வசதியும் செய்து
தரப்பட்டது.
இப்படியாக பாடசாலையின் வளர்ச்சிக்காக பல்வேறு கஷ்டங்களை
அனுபவித்து அர்ப்பணிப்புக்களைச் செய்த அதிபர் ஓய்வுபெற்றுச்
சென்றார். பாடசாலையின்
வரலாற்றில் அதிபர் த. அழகரத்தினம் அவர்களது
காலம் பாடசாலைக்கு
ஓர் பொற்காலம்
என்றால் அது
மிகையாகாது. இவரது சேவைக்காலத்திலேயே பாடசாலை தேசிய
ரீதியில் தனக்கு
என ஓர்
முத்திரையினைப் பதித்தது என்பதுதான் உண்மை.இவரைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபராக 2001.03.21 அன்று சி. ஞானேஸ்வரன் என்பவர் குறுகிய காலம் (2 வருடங்கள்) அதிபராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றார். இவரது காலத்தில் பாடசாலையின் கல்வி வளர்ச்சியடைந்ததுடன் இப்பாடசாலையின் பழைய மாணவன் தவராஜா என்பவரின் உதவியுடன் பன்முகப்படுத்தப்பட்ட அரச நிதியிலிருந்து 5 வகுப்பறைகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் அதிபர் 2003.02.28 ஆம் திகதி இடமாற்றம் செய்யப்பட்டார். இவரது இடமாற்றத்தைத் தொடர்ந்து இப்பாடசாலையின் பழைய மாணவியும் ஆங்கில ஆசிரியையுமான திருமதி செ. சகாதேவன் அவர்கள் அதிபராகக் கடமையேற்றதுடன் பூர்த்திசெய்யப்படாமல் இருந்த கட்டடத் தொகுதியினை தன்னுடைய அயராத முயற்சி, சிறந்த பேச்சாற்றல் காரணமாக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மணிபல்லவன் அவர்களின் உதவியுடன் பூர்த்தி செய்தார்.
இப்புதிய தற்போதைய அதிபரின் அதிதீவிர முயற்சியின் பயனாக கற்றல் கற்பித்தல் செயற்பாடும் அபிவிருத்தி அடைந்ததுடன்இ இணைப் பாடவிதானச் செயற்பாடுகளின் அபிவிருத்திகள் மேம்பட்டுச் செல்கின்ற நிலையினை கொக்குவில் பகுதி மக்கள் மட்டுமன்றி, பல்வேறு இடங்களிலுள்ள மாணவர்களும் கவரப்பட்டமையினால் பாடசாலையின் அனுமதிக்கான விண்ணப்பங்கள் வருடாவருடம் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்தன. இதற்கு எல்லாவற்றுக்கும் மூலகாரணம் தற்போதைய அதிபரும் ஆசிரியர்களும் தான் என்றால் அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இம்மாணவ அனுமதிக்கான இட நெருக்கடியினைக்குறைக்க பாடசாலயின் பழைய மாணவர் நம் சமூகப் புரவலலருமாகிய மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்களின் உதவியினை பாடசாலை சமூகம் நாடிச் சென்றவேளையில் எதுவித தயக்கமும் இன்றி பெருமனதோடு 140 X 30 அடி பரப்பரவு கொண்ட மண்டபத்தினை அமைத்துத் தந்தார். இம்மண்டபமே “சுப்பிரமணிய மாலதி” மண்டபம் என்னும் நாமத்துடன் உயர்ந்து நிற்கின்றது.
இம் மண்டபத்தில் மாணவச் சிறார்களின் நிகழ்வுகளைத் திறம்பட நடத்துவதற்காக பெற்றோர் ஒருவரின் உதவியுடன் பொது அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பாடசாலையானது இரண்டு கட்டிடத்தொகுதிகளாக இயங்க ஆரம்பித்தது. இக்கட்டிடத் தொகுதிகளுக்கு தனித்தனியான மின் இணைப்புஇ குடிநீர் வசதிகள், தொலைபேசி வசதிகள் என்பன தனித்தனியா மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள தலைசிறந்த பாடசாலைகள் முதல் மூன்றில் ஒரு பாடசாலையாகும். இப்பாடசாலையின் வளாகத் தேவைகளும் குறிப்பிட்ட அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை இங்கு விசேட அம்சமாகும்.தற்போதைய புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைவாக கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் அதேவேளை சம காலத்தில் பௌதீக வள அபிவிருத்தியினையும் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளமை இப்பாடசாலையின் முக்கிய சிறப்பம்சமாகும்.
இதற்கெல்லாம் காரணம் பாடசாலையின் தற்போதைய இவ் அதிபராகும். மாணவச் சிறார்களால் மடம் எனவும் பெற்றோர்களால் “அம்மா” எனவும் அன்பாக அழைக்கப்படும் இவ் அதிபர் வீட்டிற்கு செல்வதில்லையா என நானும் பெற்றோர்கள் பலரும் எண்ணியுள்ள பல சந்தர்ப்பங்கள் உண்டு. காரணம் எந்த நேரம் சென்றாலும் பாடசாலையில் அதிபரைச் சந்திக்க முடியும் . எப்போதுமே அவருடைய சிந்தனையெல்லாம் பாடசாலையின் வளர்ச்சி, அபிவிருத்தி பற்றியே இருக்கும் என்பது பெற்றோர்களின் கூற்றுக்களில் இருந்து அறியக்கூடியதாகவுள்ளது.
இதற்கு எல்லாம் காரணம்
என்ன என
ஆராய்வோமாயின் இவ் அதிபர் சிறப்பான பண்பு
தூரநோக்கு என்பது
புலப்படுகின்றது. அத்துடன் பாடசாலையின் பழைய மாணிவியாயும்
அதே பாடசாலையின்
ஆங்கில ஆசிரியராகவும்
இருந்திருக்கின்றார்கள். இப்படி இரண்டு
சந்தர்ப்பங்களும் கிடைப்பது அபூர்வம். அச் சந்தர்ப்பம்
இவ் அதிபருக்குக்
கிடைத்துள்ளது. அதனை அவரும் சரிவரப் பயன்படுத்தி
பாடசாலை வளர்ச்சி
அபிவிருத்தி என்பனவற்றின் மூலம் ஆத்ம திருப்தி
அடைந்து வருகின்றார்
என்பது உண்மை.
ஜப்பான் அரசின் கருத்துக்
கணிப்பின்படி இப் பாடசாலையானது யாழ் மாவட்ட
10 பாடசாலைகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டு யப்பான்
அரசினால் வழங்கப்பட்டு
வரும் நிதி
உதவியுடன் ஆங்கில
வள நிலையம்இ
மூலிகைத் தோட்டம்,
சிறுவர் பூங்கா
என்பன அமைக்கப்பட்டதுடன்
கற்றல் உபகரணங்களும்
கொள்வனவு செய்யப்பட்டன.
அத்துடன் அவர்களால்
துரித கணிதச்செய்கை
55 முறைக்கான சிறந்த பாடசாலைக்கான வெற்றிக் கேடயமும்
கிடைக்கப்பெற்றது இப்பாடசாலை.
இப்பாடசாலையில் கணனிக்கற்கை நெறிகள்
திறம்பட மேற்கொள்ளப்படுவதுடன்
யாழ் மாவட்டத்தில்
உள்ள ஆரம்பப்
பாடசாலைகளில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக
இப்பாடசாலை விளங்குகின்றது என்றால் அதற்குப் பாடசாலை
அதிபர், ஆசிரியர்கள்,
பெற்றோர்கள் ஆகியோரின் பேருதவியே இதற்கு எல்லாம்
காரணம் ஆகும்.
750 இற்கு மேற்பட்ட மாணவர்களையும்
25 ஆசிரியர்களையும் கொண்ட இப்பாடசாலையின்
பெருமையினை அண்மைய ஆண்டுகளில் பறைசாற்றிய மாணவர்கள்
பலரும் உள்ளனர்.
மேலும்பாடசாலையில் 2009 ஆம் ஆண்டு
நடைபெற்ற தரம்
5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய நிலையில் முதல்
பாடசாலைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு தேசிய
கல்வி ஆணைக்குழுவின்
பாராட்டும் பெற்றுள்ளது. இதன் மூலம் அனைத்துப்
பாடசாலைகள், கல்வித்திணைக்களம் என்பனவற்றின்
பார்வை எல்லாம்
இக் கொக்குவில்
இந்து ஆரம்பப்
பாடசாலை இது
திரும்பியுள்ளது என்பதனை அனைவரும் ஏற்கத்தான் வேண்டும்.இப்படியாக பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் பாடசாலையில் நூல் நிலையம், விளையாட்டு மைதானம் இல்லை என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விடையமாகக் காணப்படுகின்றது. ஆனால் அதிபர் இவ் விடங்களை கருத்திற் கொண்டு தன்னுடைய சேவைக் காலத்திலேயே தான் இப்பாடசாலைக்கு ஓர் ஒழுங்கான நூல் நிலையமும் விளையாட்டு மைதானத்தினையும் அமைத்துத் தரத் தேவையான கடும் முயற்சிகளை எடுத்துவருவதனை அவதானிக்க முடிகின்றது.
எனவே இவ்வாறு குறுகிய
காலத்தில் பல்வேறு
சாதனைகளைப்படைத்துவரும் இக்கொக்குவில் இந்து
ஆரம்பப் பாடசாலையானது
மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து அதிபரின்ஆசைகளும்
நிறைவேற எல்லாம்
வல்ல கொக்குவில்
கிருபாகர சுப்பிரமணிய
சுவாமிகளின் அருட்கடாட்சம் பாடசாலை சமூகத்திற்குக் கிடைக்கவேண்டும்