கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா , அவுஸ்திரேலியா கல்லூரிக்கு வழங்கி வரும் தனது தொடர்ச்சியான பங்களிப்பின் இன்னும் ஒர் பகுதியாக "கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் - பங்குனி" எனும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துகின்றது. "கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் - பங்குனி" தொடர்பாக, கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா , அவுஸ்திரேலியா விடுத்துள்ள ஊடக அறிக்கை...... |
வாசிப்பு ஒரு மனிதனை முழுமை அடைய செய்கின்றது. எம்மில் மறைந்து இருக்கும் ஆற்றல்களை கண்டு பிடித்துக் கொடுப்பதற்கும் தெளிவு மற்றும் சிறந்த அறிவைப்பெறுவதற்கும் வாசிப்புப் பழக்கம் மிக அவசியமாகிறது. ஆனால் எமது மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் மிக அருகிவருவதையிட்டு நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். எனவே பிள்ளைகளை வாசிக்கத் தூண்டுவதும் ஊக்கமளிப்பதும் வாசிப்பதற்கு ஏற்ற புத்தங்களை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு வழியமைப்பதும் எமது கடமையாகும். அந்தவகையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் "கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் -பங்குனி" எனும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளோம். நோக்கம்: பங்குனி (மார்ச்) மாதத்தினை கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தி இக் காலப்பகுதியில் கல்லூரி நூலகத்தில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதை ஊக்கப்படுத்துதல். வரையறை: கல்லூரியில் கல்வி கற்கும் ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு 11 வரையுள்ள மாணவர்கள் மட்டும் இப்போட்டியில் பங்கு பற்றலாம். பங்கு பற்றும் மாணவர்கள் தங்களது விண்ணப்ப படிவங்களை கல்லூரி நூலகத்திலோ அல்லது தங்களது வகுப்பாசிரியரிடமோ பெற்றுக்கொள்ளலாம். அனைத்து மாணவர்களையும் இப்போட்டியில் பங்குபற்ற செய்வது விரும்பதக்கது. போட்டி விதிமுறைகள்: 1. மார்ச் - 01 தொடக்கம் 31 வரையான காலப்பகுதி மட்டுமே கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதத்திற்கான நாட்களாக கருத்தில் கொள்ளப்படும். 2. மாணவர்கள் கல்லூரி நூலகத்தில் உள்ள எந்த புத்தகத்தையும் நூலகத்தில் இருந்தோ அல்லது இரவல் பெற்றுச்சென்றோ வாசிக்கலாம். 3. மாணவர்கள் புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் எம்மால் வழங்கப்படும் பத்திரத்தை பூரணப்படுத்தி வகுப்பாசிரியர் அல்லது நூலக ஆசிரியர் , பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் கைஒப்பத்துடன் நூலக ஆசிரியரிடம் அல்லது வகுப்பாசிரியரிடம் கையளிக்க வேண்டும். தெரிவு முறை: வகுப்பு மட்டத்தில் கூடுதலான நூல்களை வாசித்த முதல் மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர். பரிசில்கள் : பெறுமதியான பின்வரும் பணப்பெறுமதி உள்ள காசோலைகள் வகுப்பு மட்டத்தில் வெற்றியீட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் இக்காசோலையை யாழ்பாணத்தில் உள்ள பிரபல புத்தகசாலைகளில் மட்டுமே உபயோகிக்க முடியும். புத்தகசாலைகளின் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். � ஆண்டு 6 : 1ம் பரிசில் - 3000.00 , 2ம் பரிசில் - 1800.00 , 3ம் பரிசில் - 1200.00 � ஆண்டு 7 : 1ம் பரிசில் - 3500.00 , 2ம் பரிசில் - 2100.00 , 3ம் பரிசில் - 1400.00 � ஆண்டு 8 : 1ம் பரிசில் - 4000.00 , 2ம் பரிசில் - 2400.00, 3ம் பரிசில் - 1600.00 � ஆண்டு 9 : 1ம் பரிசில் - 4500.00 , 2ம் பரிசில் - 2700.00 , 3ம் பரிசில் - 1800.00 � ஆண்டு 10 : 1ம் பரிசில் 5000.00, 2ம் பரிசில் - 3000.00 , 3ம் பரிசில் - 2000.00 � ஆண்டு 11 : 1ம் பரிசில் 5500.00 , 2ம் பரிசில் - 3300.00, 3ம் பரிசில் - 2200.00 கையெழுத்து சஞ்சிகை: இது தவிர வாசிப்பு மாதத்தின் இறுதி நாளில் வகுப்பு ரீதியான மாணவர் கையெழுத்து சஞ்சிகை ஒன்றும் வெளியீட்டு வைக்கப்படும். இக் கையெழுத்து சஞ்சிகைக்கான ஆக்கங்களை வகுப்புரீதியாக வகுப்பாசிரியர்களால் அமைக்கப்படும் ஐவர் கொண்ட மாணவர் குழுவினரிடம் மார்ச் - 25 ம் திகதிக்கு முன்பதாக ஒப்படைக்கவேண்டும். இக்கையெழுத்து சஞ்சிகைகள் அதிபரால் அமைக்கப்படும் மூன்று ஆசிரியர் கொண்ட குழுவினரால் மதீப்பீடு செய்யப்பட்டு மிகச்சிறந்த சஞ்சிகைகான பரிசில் வழங்கப்படும். இக் கையெழுத்து சஞ்சிகைகள் கல்லூரி நூலகத்தில் மாணவர் பாவனைக்காக வைக்கப்படும். மாணவர் ஆக்கங்கள் யாவும் அவர்களது சொந்த கையெழுத்தில் இருத்தல் வேண்டும். கணணி தட்டச்சு எழுத்துக்கள் கொண்ட ஆக்கங்கள் இச்சஞ்சிகையில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. இத்திட்டத்தினை முன்னகர்த்திச்செல்ல ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களினது ஆதரவினை எதிர்பார்க்கின்றோம். நன்றி கொ-இ-க பழைய மாணவர் சங்கம் , விக்ரோறியா, அவுஸ்திரேலியா |
Homeகொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் - பங்குனி !
கொக்குவில் இந்துவின் வாசிப்பு மாதம் - பங்குனி !
Feb 25, 20150 comments
உடனடியாக செய்தி அனுப்ப
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
Powered By | Blog Gadgets Via Blogger Widgets