சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடாத்திய வட மாகாண அணிகளுக்கிடையிலான கிறிக்கட் போட்டியில் கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
வட மாகாண ரீதியில் 48 அணிகள் பங்குகொண்ட இக் கிறிக்கட் போட்டியில் நெல்லை பிளாஸ்ரர்ஸ் அணியை வென்று கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
இறுதிப் போட்டிக்கு முன்பாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்களுக்கு வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளன உப தலைவரும், பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான க.உஷாந்தன் தலிமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் போட்டித்தொடரின் சிறப்பாட்டக்காரராக தெரிவான நெல்லை பிளாஸ்ரர்ஸ் அணி வீரர் பிரகாஷ் கான பரிசிலை தேசிய இளைஞர் கழக சம்மேளன உப தலைவர் எஸ்.விஜிதரன் வழங்கினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரனாக தெரிவான கொக்குவில் ஏ.பி அணி வீரன் ஆதித்தனுக்கான பரிசிலை யழ் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகார் எஸ்.மோகன் வழங்கினார்.
போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற நெல்லை பிளாஸ்ரர்ஸ் அணிக்கான காசோலையினை நிகழ்வின் சிறப்பு விருந்தினரும், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஐ.தவேந்திரன் வழங்க அவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் வடமாகாண சபை உறுப்பினரும், வடமாகாண விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இணைப்பாளருமான இ.ஆனல்ட் வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஏ.பி அணிக்கான வெற்றிக்கிண்ணத்தையும், காசோலையினையும் நிகழ்வின் பிரதம விருந்தினரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வழங்கினார்.
கொக்குவில் ஏபி அணியானது பல வெற்றிகிண்ணங்களை தன் வசம் வைத்து நடப்பு சம்பியன் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது எனலாம். புதிய அணித்தலைவர் ஆதீத்தன் தலமையிலே இவ் வெற்றிக்கிண்ணம் கைபற்றப்பட்டுள்ளது.