Homeபிரபல நடன விரிவுரையாளர் சாந்தினி சிவனேசனுக்கு தேசமான்ய விருது
பிரபல நடன விரிவுரையாளர் சாந்தினி சிவனேசனுக்கு தேசமான்ய விருது
இலங்கையின் புகழ் பூத்த நடனத்துறை விரிவுரையாளரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபருமாகிய திருமதி சாந்தினி சிவனேசன் தேசமான்ய என்ற உயர் விரது வழங்கிக் கொளரவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் எஸ்இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருமதி. சிவனேசன் கொக்குவிலில் கலாபவனம் என்ற நாட்டியப் பள்ளியை இயக்கி வருகின்றார். இவரது தந்தையார் ஏரம்பு சுப்பையா இலங்கையில் நாட்டியக் கல்வியை அறிமுகம் செய்தவர்களுள் முக்கியமானவர் ஆவார். பரத நடனக் கலை யாழ்ப்பாணத்தில் பிரபலமடையாத காலகட்டத்தில் இவரது தந்தையார் ஏரம்பு சுப்பையா 1948 ஆம் ஆண்டில் நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்திருந்தார். இதில் கல்வி பயின்ற சாந்தினி சிவனேசன் பிரபல நாட்டிய மேதை அடையாறு லக்ஸ்மணிடமும் கல்வியைப் பெற்றிருந்தார். அண்மையில் கொழும்புக் கம்பன் கழகத்தால் நடத்தப்பட்ட கம்பன் விழாவின் போதும் நாட்டிய விற்பன்னர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலையில் திருமதி சாந்தினி சிவனேசன் கௌரவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.