கொக்குவில் இந்து மயானத்தில் நல்லூர் பிரதேச சபையினரால் விலங்குக் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் வெட்டிப் புதைக்கப்படாமை காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து இந்தப் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகரிடமும் இப்பகுதி மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து பல தடவைகள் பிரதேச சபையினருக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச மக்கள் கூறியுள்ளன